Friday, May 20, 2011

நிறம்


அண்ணா பூங்காவிற்குள்  நுழைந்ததுமே  புவனாவின்  கண்களில் அவர்  பட்டு  விட்டதால் அவளுக்கு  கோபம் தலைக்கேறியது...
நேராய்  அவரிடம்  சென்று... "நீங்கல்லாம்  என்ன  நினைச்சிகிட்டு இருக்கீங்க மனசுல?. நீங்க  பொண்ணு  பார்க்க  வர்றீங்கன்னு   நாங்க  அலங்காரம்  பண்ணிட்டு  
இருப்போம். நீங்க வந்து  பார்த்துட்டு, நல்லா சாப்பிட்டுட்டு ,பொண்ணே பிடிக்கலன்னு 
சொல்லிட்டு  போயிடுவிங்க. உங்களுக்கெல்லாம்  மனசுல மன்மதன்னு  நினைப்பா?" என்று மூச்சிரைக்க  முடித்தாள் புவனா.

அவர்  நிதானமாய்  தொடங்கினார் ."இப்ப  நான்  பேசலாமா ? மேடம்  நேற்று  உங்க  வீட்டுக்கு  பொண்ணு  பார்க்கத்தான்  வர்றேன்னு  எனக்கு தெரியாது வீட்டுல  கிளம்பசொன்னங்கன்னு  வந்ததுக்கு  அப்புறம்  தான்  தெரிஞ்சது. நான்  கல்யாணம்  பண்ணிகிட்டா  கறுப்பான ஒரு  பொண்ண தான்  கல்யாணம்
பண்ணிக்கனும்னு  இருக்கேன். ஏன்னா   கறுப்பான  பெண்கள்  எப்படில்லாம்   நிராகரிக்க  படறாங்கன்னு  எனக்கு  தெரியும் . நீங்க  அழகா  இருக்கீங்க, உங்களுக்கு  என்ன  விட நல்லா  மாப்பிள்ளை, நீங்க  சொன்ன  மாதிரி  மன்மதன்  கிடைப்பான். அதனால   தான்  பிடிக்கலன்னு சொன்னேன். இத  உங்க  கிட்ட  சொல்ல  நினைச்சேன் . உங்க  அப்பா  பேச  ஒத்துக்கல ,அதான்  வேண்டான்னு  சொல்லிட்டேன் " என்று  நிறுத்தி  நிதானமாய்  முடித்தார்.

தன்  அவசரத்தனத்தை  உணர்ந்து  தலை  குனிந்தாள்  புவனா            
 " சாரி  சார் ,என்ன மன்னிச்சிடுங்க .உங்க மனசு   தெரியாம  கோபப்பட்டுட்டேன்.இப்ப உங்கள  நினைச்சு  ரொம்ப  சந்தோஷப்படறேன். உங்க கல்யாணத்துக்கு  என்னை  கட்டாயம்
நீங்க  கூப்பிடனும்"  என்று  கண்களை துடைத்து  வெளியேறினாள்.


3 comments:

  1. Really Nice Na ... Wonderful Thinking

    ReplyDelete
  2. Salute the man !
    Besides great thought by the writer.
    Great one Ananth Sir !

    ReplyDelete