Friday, May 20, 2011

வேலை


சுமதிக்கு சங்கீதம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று வெகுநாளாய் ஆசை. சங்கீத மேதை சரஸ்வதியம்மாள் அவர்களை சந்தித்து எப்படியாவது கேட்டு விட வேண்டுமென்று சென்றாள்.

வாயில்கதவு   முதல் ஒவ்வொரு புறமும் இசைகருவிகளின் வடிவம் போல 
அமைக்கப்பட்ட சங்கீத வீடு.

உள்ளே செல்ல அனுமதி கிடைத்ததும் வரவேற்பரையில்  அமர்ந்தாள்.

"ஹை...  யாம் ஷிவா, சரஸ்வதி அம்மாளின் ஒரே பிள்ளை" -- அறிமுகம் செய்து கொண்டான்.

"என்னை உங்களுக்கு..." என்று இழுத்தாள் சுமதி.

"என்ன இப்படி கேட்டுட்டீங்க,உங்க வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டுல இருக்கிற செல்வா என்னோட  நண்பன்.அவன் வீட்டுக்கு வந்த போதெல்லாம் உங்க பாட்டு கேட்கும். ரொம்ப ஸ்வீட் வாய்சுங்க உங்களுக்கு.அருமையா பாடறீங்க" அருவியாய் பொழிந்தான்.

"என்னை ரொம்ப புகழ்றீங்க.
நான் இங்க வந்ததே உங்க அம்மாகிட்ட சங்கீதம் கத்துக்கலான்னு கேட்கத்தான்" என்று சொல்லி கொண்டிருந்தபோதே  சரஸ்வதியம்மாள் மாடியிலிருந்து கீழே வர...

"வணக்கம்மா"

"யாரும்மா நீ?"

"என் பேரு சுமதி. உங்ககிட்ட சங்கீதம் கத்துக்கணும்னு ஆசை. அதான் கேட்க வந்தேன்"

"நான் இப்ப யாருக்கும் சங்கீதம் கத்துத்தர்றதில்லையே"

"இல்லம்மா, எனக்காக நீங்க கொஞ்சம் மனசு வைக்கணும்"

"நீ என்ன ஜாதி"

"எதுக்கும்மா"

"கண்டவங்களுக்கெல்லாம் நான் கதுதரமாட்டேன்"

"இசையில பெயரும்,புகழும் உள்ள நீங்கல்லாம் ஜாதி பார்த்து பிரிக்க கூடாதும்மா. நிச்சியம் உங்க பேரக் காப்பதுற மாதிரி நான் வருவேன். ஜாதி பார்த்து பாகுபாடு காட்டறது நியாயமில்லம்மா"

"என்ன மிரட்டுறியா?"

"இல்லம்மா...வேண்டுகோள்"

"உனக்கு சங்கீதத்த பத்தி என்ன தெரியும்?"

"ஓரளவு தெரியும்.நிறைய ஆசையும் அக்கறையும் இருக்கு"

"நான் நினைச்சது எனக்கு கிடைச்சிரிச்சு. இனிமே ஓய்வெடுக்கத்தான் இங்கு செட்டில் ஆனேன்.அதனால நீ போகலாம்."

"அம்மா அப்படிச் சொல்லாதீங்க. இது என்னோட ரொம்ப நாள் தாகம். நெஞ்சுக்குள்ள இருக்கிற வெறி. நீங்க கத்துதரலேன்னா நான் போக மாட்டேன். உங்க வீட்ல ஏதாவது வேலை கொடுங்க அப்படியாவது உங்க சங்கீதத்தை கேட்கிற பாக்கியம் எனக்கு கிடைக்கட்டும்"

"ஆக...நீ போறதா இல்லை?"

"ஆமாம்மா"

"சரி...நீ ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறதால உனக்கு ஒரு வேலை தர்றேன், செய்யிறியா?"

"செய்யிறேன்...என்ன வேலம்மா?"

"ம்ம் ....என் பையனுக்கு மனைவிங்கிற  வேலை, எனக்கு மருமகள்ங்கிற வேலை,செய்யிறியா?"

சுமதிக்கு பேச்சே வரவில்லை திகைப்பில்.

"எனக்குத் தெரியும்மா, என் பையன் செல்வா வீட்டுக்கு போயிட்டு 
வந்தப்பெல்லாம், அம்மாஒருபொண்ணு அருமையா பாடுறான்னு உன்னை பத்தியே 
புலம்ப ஆரம்பிச்சான். ஆயாம்மா வந்து நீ எங்கிருந்து வந்திரிக்கேன்னு சொன்னதுமே நான் புரிஞ்சிக்கிட்டேன். சும்மா விளையாட்டா சில கேள்விகள் கேட்டேன். என்ன உனக்கு சம்மதமா?"

சுமதி வெட்கத்தில் தலையசைத்தாள்.

பெற்றவர்களின் ஆசியோடு ஒரு நன்னாளில் சுமதி-ஷிவா கல்யாணம் விமரிசையாய் நடந்தது.

1 comment:

  1. Good One Na .. But I feel the conversation and justification at the end doesn't go well with the theme of the story ..

    ReplyDelete